நாளை தமிழகம் வருகிறார் சச்சின் டெண்டுல்கர்! 

 
Published : Mar 28, 2018, 03:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
நாளை தமிழகம் வருகிறார் சச்சின் டெண்டுல்கர்! 

சுருக்கம்

Sachin Tendulkar arrives in Chennai tomorrow

பிரபல பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு விழாவில், இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு உரையாட உள்ளார். செங்கல்பட்டு அருகே நடைபெறும் விழாவில் சச்சின் டெண்டுல்கர் நாளை கலந்து கொள்ள உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே மஹிந்திரா வேல்டு சிட்டி உள்ளது. இங்கு பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு பி.எம்.டபிள்யூ கார் தொழிற்சாலையும் இயங்கி வருகிறது. இதன் 11 ஆம் ஆண்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

தொழில்நுட்பங்களில் இந்தியா வலிமையான நிலையை அடைவதற்காக இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இதன் முதல் கட்டமாக பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழாவில் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா மற்றும் நிர்வாக இயக்குநர் ஜாக்ஹென் ஸ்டால்காம்ப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

அவர்களுடன் சச்சின் டெண்டுல்கரும் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாட உள்ளார்.  பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் 2015 ஆம் ஆண்டு கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், கார்களை அசம்பிள் செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!