நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் கொள்ளை - எவ்வளவு தெரியுமா?

 
Published : Mar 28, 2018, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் கொள்ளை - எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Former wife of actor Prasanths house robbery

நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து 170 சவரன் தங்கநகை மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

நடிகர் பிரஷாந்த்துக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

திருமணமான சில மாதங்களிலேயே கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை பிரசாந்துக்கு தெரியவந்தது.

இதையடுத்து பிரசாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

இதையடுத்து கிரகலட்சுமி அடையாறில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு சொந்தமாக தி நகர் தெற்கு போக்சாலையில் வீடு ஒன்று உள்ளது. இங்கு வாரம் ஒருமுறை வந்து தங்கிவிட்டு செல்வாராம்.

இந்நிலையில், இன்றுகாலை 7 மணிக்கு அவரது தி நகர் வீட்டின் வீட்டின் கதவு ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அவரது தங்கையை அனுப்பி பார்த்த போது 170 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கபணமும் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!