பாதுகாப்பை உடைத்து ஆட்சியர் அலுவலகத்தில் போராடிய ஊரக வளர்ச்சிதுறை பணியாளர்கள்…

 
Published : Mar 21, 2017, 08:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பாதுகாப்பை உடைத்து ஆட்சியர் அலுவலகத்தில் போராடிய ஊரக வளர்ச்சிதுறை பணியாளர்கள்…

சுருக்கம்

Rural valarcciturai collectors office fought to break the security personnel

ஊட்டி

ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் போடப்பட்டு இருந்த பலத்த பாதுகாப்பை மீறி குறைதீர்க்கும் கூட்டத்தில் நுழைந்த ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 100 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் கடந்த 14–ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாவது நாளான நேற்று தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை முன்னிட்டு ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்பதால், மனு கொடுக்க வந்த பொதுமக்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

பலத்த காவல் பாதுகாப்புக்கு இடையே ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் நுழைந்தனர். பின்னர், அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியது:

“பதவி உயர்வு பெற்ற ஒன்றிய பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறையில் உள்ள வெற்றுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கணினி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர் பேசினார்.

இதனையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 25 பெண்கள் உள்பட 100 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!