
கரூர்
கரூரில் ஆணையர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என ஊரக வளர்ச்சித்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பினர் எட்டு ஒன்றியங்களில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் கருவூலம் மூலம் வழங்கப்பட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கரூர் மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆணையர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணிமலை, குளித்தலை, அரவக்குறிச்சி, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, கடவூர் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது.
தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமைத் தாங்கினார்.
தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர் கனகராஜ், தணிக்கையாளர் தமிழ்வாணன் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.