எப்சி செய்த வேனுக்க தகுதி சான்றிதழ் கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ இன்ஸ்பெக்டரின் லாக்கரில் இருந்து 10 கிலோவுக்கு மேற்பட்ட தங்கத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எப்சி செய்த வேனுக்க தகுதி சான்றிதழ் கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ இன்ஸ்பெக்டரின் லாக்கரில் இருந்து 10 கிலோவுக்கு மேற்பட்ட தங்கத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து கடந்த 11ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மேற்கண்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துககு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, அங்கு வந்த ஒரு வேனுக்கு தகுதி சான்றிதழ் கொடுக்க ரூ.25 ஆயிரம் வாங்கியபோது, இன்ஸ்பெக்டர் பாபு, அவருக்கு உடந்தையாக இருந்த செந்தில்குமார் ஆகியோரை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இதைதொடர்ந்து, கடலூர் மாவட்டம் தெளலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
மேலும், இன்ஸ்பெக்டர் பாபு கணக்கு வைத்துள்ள அனைத்து வங்கிகளிலும், அங்குள்ள அவரது லாக்கர்களையும் முடக்கினர். பின்னர் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 5 வங்கிகளில் பாபுவுக்கு சொந்தமான 6 லாக்கர்களில் சோதனை செய்தனர். அதில், 3 லாக்கர்களில் நடத்திய சோதனையில் 10 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம், மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.