அமைச்சர் சி.வி.சண்முகம், குறித்து அவதூறாக செய்தி பரப்பிய அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் சி.வி.சண்முகம், குறித்து அவதூறாக செய்தி பரப்பிய அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டத்துறை அமைச்சர் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப்-ல் செய்திகள் பரவி வந்தன.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய இந்த செய்தி, அமைச்சர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பருவநிலை காரணமாக, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு, சளி மற்றும் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காகத்தான் அவர் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதூறாக வாட்ஸ் ஆப்-ல் செய்தி பரப்பியவரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இமைளஞர் பாசறை இணை செயலாளராக இருப்பவர் நூர் அலாவுதீன்.
இவர் நியமித்து வரும் வாட்ஸ் ஆப் குழுவில், அமைச்சர் தொடர்பாக அவதூறு பரப்பியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அமமுக பிரமுகர் நூர் அலாவுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.