தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறும் பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறும் பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார். முன்னதாக தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி விளையாட்டு மைதானங்களில் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தங்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசு… மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசியர் அதிரடி!!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, திறந்தவெளியில் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், திறந்தவெளியில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் இந்த பேரணியின் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே சென்னையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார்.