2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை திட்டம் .. ரூ.40 கோடி வைப்பு நிதி வழங்கினார் முதலமைச்சர்..

By Thanalakshmi VFirst Published Oct 14, 2022, 3:30 PM IST
Highlights

நிதி வசதி குறைவாக உள்ள 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சர் இன்று வழங்கினார்.
 

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் ஒரு கால பூஜைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு திருக்கோயில் பெயரிலும் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூஜை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

மேலும் படிக்க:ஓ.பி.ரவீந்திரநாத்தை கைது செய்ய வேண்டும்.! தங்க தமிழ் செல்வன் புகார் மனுவால் பரபரப்பு.. என்ன காரணம் தெரியுமா..?

இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது,  "ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் நிதி வசதி குறைவாக உள்ள 12,959 திருக்கோயில்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நிதி வசதி குறைவாக உள்ள மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. 

 மேலும் படிக்க:என் மகளைக் கொன்றவனை ஏதாவது செய்யுங்க.. கமிஷனர் காலில் விழுந்து கதறிய சத்யாவின் தாய்..!

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

click me!