அரசுத்துறைகள் கோ–ஆப்டெக்சில் துணி வாங்கியதில் ரூ.35 கோடி நிலுவை; தமிழக முதல்வர் தான் வாங்கித் தரணும்னு ஆர்ப்பாட்டம்…

First Published Jun 5, 2017, 8:02 AM IST
Highlights
Rs 35 crore worth of stocks in co-optics


சேலம்

பல்வேறு அரசுத்துறைகள் மூலம் கோ–ஆப்டெக்சில் துணி வாங்கியதில் நிலுவையில் உள்ள ரூ.35 கோடயை பெற்றுத்தர தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கப் பொதுச்செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “கோ–ஆப்டெக்ஸ் மூலம் நடத்தப்படும் முகாம் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சமவேலை, சமஊதியம் வழங்க வேண்டும்.

ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,

பல்வேறு அரசுத்துறைகள் மூலம் கோ–ஆப்டெக்சில் துணி வாங்கியதில் ரூ.35 கோடி நிலுவை உள்ளது. அதை பெற்றுத்தர தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் பணியாளர் சீருடை வாங்கியதில் ரூ.15 இலட்சம் பாக்கி உள்ளது. அதை வழங்க போக்குவரத்துக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க மைய குழு மாநில துணைத் தலைவர் சந்திரமோகன் உள்பட சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரியும் கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பலர் திரளாக இதில் பங்கேற்றனர்.

tags
click me!