தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மூன்று வணிக வங்கிகளில் மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.2 ஆயிரத்து 650 கோடி அளவுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழவதும் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்கள் இதுவரை 96 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக அறிவித்திருக்கும் ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை வருகின்ற அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இதுவரை மொத்தம் 4 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாகவும், சிட்டி யூனியன் வங்கியில் 726 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் 693 கோடி ரூபாய் திரும்பி வந்திருப்பதாவும் கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த மே 19ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 3.5 லட்சம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், செப்டம்பர் 29ம் தேதி வரை 3.4 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாகவும், அதாவது மொத்த மதிப்பில் 96 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கூடலூரில் அட்டகாசம் செய்த காட்டு யானையை அசால்ட்டாக விரட்டிய வன ஊழியர்
அதன்படி அக்டோபர் 8ம் தேதி முதல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவோ, வங்கிக் கணக்கில் வரவு வைக்கவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.