விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25,00,000 நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Mar 10, 2024, 11:32 AM IST

 காவலர் ராஜேஷ் அவர்கள் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.


மயிலாடுதுறை அருகே விபத்தில் உயிரிழந்த காவலர் ராஜேஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் ராஜேஷ் (PC  699 SCPR), வயது 35, த/பெ. ரத்தினசாமி என்பவர் நேற்று (09.03.2024) இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகம், சீர்காழி - நத்தம் சாலையின் தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையடைந்தேன்.

Latest Videos

இதையும் படிங்க: பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு வீடு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இவ்விபத்தில் காவலர் ராஜேஷ் அவர்கள் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். காவலர் ராஜேஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க:  விசிக துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. யார் இந்த ஆதவ் அர்ஜுனா?

click me!