இனி இவர்களுக்கும் ரூ.1000! தோழி விடுதிகள் குறித்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

Published : Mar 14, 2025, 12:16 PM IST
இனி இவர்களுக்கும் ரூ.1000! தோழி விடுதிகள் குறித்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

சுருக்கம்

Tamil Nadu Budget: 2024-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அப்போது தோழி விடுதிகள், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களைப் போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். அதாவது தமிழ்நாட்டின் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான 'தோழி'பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கனவே தாம்பரம், திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் 1,303 மகளிர் பயன்பெறும் வகையில் இயங்கி வருகிறது. எதிர்வரும் நிதியாண்டில் காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன் பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் நோக்கத்துடன் நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்படும். மேலும் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருந்தும் மாணவியர் தங்களது உயர்கல்விக் கனவை நனவாக்கிடும் வகையில் பெரநகரங்களுக்கு வருகை புரியும்போது அவர்களுக்கு தரமிக்க மற்றும் பாதுகாப்பான விடுதி வசதிகள் அமைத்திட  வேண்டிய தேவையை அரசு உயர்ந்துள்ளது.

எனவே எதிர்வரும் நிதியாண்டில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் தலா அயிரம் மாணவியர் தங்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் மொத்தம் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும். தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறவனத்தால் பராமரிக்கப்படவிருக்கும் இவ்விடுதிகளின் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிறபடுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். 

மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்விற்கென நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது இன்றியமையாததாகும். எனவே புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டம் இவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!