
Tamil Nadu government kakkum karangal scheme : தமிழக அரசு பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்தமாக தொழில் செய்து முன்னேறும் வகையில் மானிய கடன் உதவி, வட்டி தள்ளுபடி, குறைவான வட்டி என பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் குறைந்த வட்டியில் மானிய கடன் உதவி திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்து முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் பொதுத் துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு முன்னாள் படைவீரர் நலத்துறை “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சுதந்திர தின உரையின்போது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கிட முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இ்ன்றயை தினம் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் தொழில் தொடங்க மூலதனமாக ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன் உதவி,
கடன் தொகையில் 30% மூலதன மானியம்,
மீதமுள்ள கடன் தொகைக்கு 3 சதவீதம் வட்டி மானியம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களைச் சார்ந்த வாரிசுதாரர்கள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகங்களை அணுகலாம் எனவும் ஏற்கனவே இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 மாதமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தற்பொழுது இந்த திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயில்விழி செல்வராஜ், தலைமைச்செயலளார் முருகானந்தம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 348 முன்னாள் படைவீரர்களில் 10 முன்னாள் படை வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது