
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். பினுவை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், ரபுடி பினு சரடைந்துள்ளார்.
சென்னை, பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் தலைமறைவான ரவுடிகள் ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மலையம்பாக்கம் பகுதிக்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் சென்றனர். ரோந்து பணியின்போது அங்கு வந்த வாகனத்தை சோதனையிட்ட போலீசார், ரவுடிகள் இருப்பதை தெரிந்து கொண்டனர். ரவுடிகள் அனைவரும் குடித்துவிட்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களைப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தப்பியோட முயன்ற சிலரை போலீசார் துப்பாக்கி முனையிலும் கைது செய்தனர். ரவுடி கும்பல் தலைவனான பினு உள்ளிட்ட 50 ரவுடிகள் தப்பியோடினர். கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து 8 கார்கள், 38 பைக்குகள் மற்றும் அரிவாள், கத்திகள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி கூட்டத்தின் தலைவனான பினு வை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ரவுடி பினு, அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கொலை, ஆள்கடத்தல் உள்ளிட் பல்வேறு வழக்குகளில் பினு தேடப்பட்டு வந்துள்ளார். பூந்தமல்லி, வடபழனி, விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் பினு மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.
சரணடைந்த ரவுடி பினுவிடம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரவுடி பினுவை, சுட்டுப்பிடிக்க போலீசார் உத்தரவிட்டிருந்த நிலையில், போலீசில் பினு சரணடைந்துள்ளார். என்கவுண்டருக்கு அஞ்சியே பினு போலீசில் சரணட