
கைதாகி ஜாமீனில் விடுதலையான சென்னை ரவுடி பினு தலைமறைவாகியுள்ளார். மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் 10 மணிக்கு கையெழுத்திட நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஜாமீன் நிபந்தனைப்படி காவல்நிலையத்தில் கையெழுத்திடாமல் ரவுடி பினு தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
குடிபோதையில் இருந்ததால் 75 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர். இதில் பினு உள்ளிட்ட முக்கிய 3 ரவுடிகள் தப்பினர். இந்நிலையில் தனிப்படை அமைத்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.