
புதுக்கோட்டை
வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் சாகுபடி செய்த நெற்பயிர் கருகியது. எனவே, காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கின்றன.
இந்தக் குளங்களுக்கு உட்பட்ட பகுதி வறண்ட பூமியாகக உள்ளது. எனவே, இந்தக் தண்ணீரைக் கொண்டுதான் விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
பருவமழை குறைந்ததாலும், வரத்துவாரி மராமத்து இல்லாததாலும் குளங்களுக்கு சரிவர நீர் செல்லவில்லை. மற்ற மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடும் அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்ததை பார்த்தும் இங்கும் மழை பெய்யும் என்று நம்பி பெரும்பாலான விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கி நெற்பயிரை நடவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் பெய்த மழை போதுமானதாக இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானார்கள்.
எனவே, சரியான விளைச்சல் இல்லாமல் கருகிய நெற்பயிர்கள் கருகியதால், காப்பீடு செய்த நெற்பயிர்களுக்கு நிவாரணத் தொகையை கொடுக்க வேண்டும் என்றும் அதனை உடனே வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.