வங்கிக் கணக்கு எப்படி தொடங்க வேண்டும்?...இனி ரோபோ சொல்லித் தரும்...!!!

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 03:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
வங்கிக் கணக்கு எப்படி தொடங்க வேண்டும்?...இனி ரோபோ சொல்லித் தரும்...!!!

சுருக்கம்

500 மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் சாதாரன மக்களும் வங்கிகளை நோக்கி ஓடத்தொடங்கியுள்ளனர். வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் கூட உடனடியாக புதுக்கணக்கு தொடங்கி வருகின்றனர். ஆனால் எத்தனை பேருக்கு வங்கி நடவடிக்கைகள் குறித்து தெரியும்? அதுவும் கிராமப்புற மக்களுக்கு வங்கிகள் குறித்து தெரிய வாய்ப்பு இல்லை என்பதே உண்மை..

வங்கி ஊழியர்களுக்கும் நேரமின்மை காரண மாக புதுக்கணக்கு தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இப்பிரச்சனைக்கு ஒரு  முற்றுப்புள்ளி வைக்க முன்வந்திருக்கிறார் கோவையைக் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

விஜய்..இவர் கண்டுபிடித்ததுள்ள மனித ரோபோ வங்கிகள் தொடர்பான அத்தனையையும் கைவிரல் நுனியில் வைத்திருக்கிறது. ஆம் இந்த ரோபோவுக்கு வங்கி தொடர்பான அனைத்தும் தெரியும்...அதுவும் 15 மொழிகளில்...

வாடிக்கையாளர்கள் வந்தால் அவர்களை வரவேற்று, வங்கி கணக்கு தொடங்க இந்த ரோபோ சொல்லிக்  கொடுக்கும். அதுமட்டுமல்ல வங்கி கணக்கு தொடர்பான எல்லா விபரங்களையும் ரோபோ கற்றுத்தரும்...

விஜய் வடிவமைத்துள்ள இந்த மனித ரோபோ விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்புறமென்ன? வங்கி கணக்கு இல்லை...அது குறித்த தகவல்கள் தெரியாது...எனக்கு சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை என இனிமேல் யாரும் தப்பிக்க முடியாது.வங்கிக் கணக்கு தொடங்க புறப்படுங்கள்...அதைத் சொல்லிக் கொடுப்பதற்கு மனித ரோபோ தயாராக உள்ளது-

PREV
click me!

Recommended Stories

MK Stalin: வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றியை கூட சொல்லாத காங்கிரஸ்..! முதல்வர் பரபரப்பு ட்வீட்..
TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..