உஷார்.. அடுத்த 2 நாட்களுக்கு கொளுத்த போகும் வெயில்.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..

Published : May 01, 2022, 01:19 PM IST
உஷார்.. அடுத்த 2 நாட்களுக்கு கொளுத்த போகும் வெயில்.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..

சுருக்கம்

தமிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 -3 டிகிரி செல்‌சியஸ்‌ அஇகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிமை மையம் எச்சரித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சு மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக,

01.05.2022, 02.05.2022: தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானதுன் முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌.

03.05.2022 முதல்‌ 05.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சல இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 -3 டிகிரி செல்‌சியஸ்‌ அஇகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ பதுவான மழை அளவு (சென்டிமீட்டரில்‌):

தென்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 3, கூடலூர்‌ பஜார்‌ (நீலகிரி) 2, தேவலா (நீலி) 1, தளி (கிருஷ்ணகிரி) 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

05.05.2022: தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ தெற்கு அந்தமான்‌ கடல்‌  பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!