
ஆர்.கே.நகரில் வாக்களித்தது யாருக்கு என அறியும் வகையில், ஒப்புகை சீட்டு அமுல்படுத்தபடும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான 1200 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த இடைதேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தேர்தலில் எவ்வித குளறுபடிகளும் நடைபெறாமல் இருக்க 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறன்றனர்.
இந்நிலையில், வாக்குபதிவு குறித்து சில தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
வாக்காளர்கள் ஒப்புகை சீட்டை காணும் முறை அமல்படுத்தப்படும்.
வாக்காளர்கள் யாருக்கு வாளித்தனர் என அறியும் வசதி ஆர்.கே.நகர் தேர்தலில் பயன்படுத்தப்படும்.
வாக்கு எண்ணிக்கையில் சர்ச்சை ஏற்பட்டால் வாக்குச்சீட்டுகளை எண்ணி சரிபார்க்க முடியும்.
புதிய முறை வாக்குபதிவு எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
256 வாக்குசாவடிகளில் புதிய முறை செய்லபடுத்தபடும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.