கோவையில் பிடிபட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்! சொகுசு விடுதியில் கைது செய்த கொல்கத்தா போலீஸ்...

 
Published : Jun 20, 2017, 08:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
கோவையில் பிடிபட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்! சொகுசு விடுதியில் கைது செய்த கொல்கத்தா போலீஸ்...

சுருக்கம்

Retired Justice C S Karnan arrested by West Bengal CID in Coimbatore

கோவையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தலைமறைவாகி முன்னாள் நீதிபதி கர்ணனை கைது செய்தது கொல்கத்தா போலீஸ்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன் சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாக கூறி, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. விசாரணைக்கு ஒத் துழைக்காததால், அவரை கைது செய்யும்படி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல் கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது.

கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களையும் உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி கர்ணன் 12.6.1955-ல் பிறந்தவர். உயர் நீதிமன்ற நீதிபதி யின் பதவிக்காலம் 62 வயது. அவருக்கு கடந்த 11-ம் தேதியுடன் 62 வயது பூர்த்தியாகிவிட்டதால், அவரது பதவிக்காலம் கடந்த 12 ஆம் தேதி முடிந்துவிட்டது.

வழக்கமாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர்களுக்கு அந்த மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா நடத்தப்படும். இந்த மரியாதை எதுவும் இன்றி, நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப் பட்டபோது, நீதிபதி கர்ணனுக்கு தண்டனை வழங்க மூத்த வழக் கறிஞர் கே.கே.வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்தார்.

நீதிபதி ஒருவரை பணிக்காலத் திலேயே கைது செய்தோம் என்ற களங்கம் வர வேண்டாம். அவர் ஓய்வுபெறும் வரை பொறுத்திருந்து அதன்பிறகு அவருக்கு தண்டனை வழங்கலாம் என்று பரிந்துரை செய்தார். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த பரிந்துரை தற்போது உண்மையாகும் வகையில், நீதிபதியாக இருந்தவரை கர்ணன் கைது செய்யப்படவில்லை என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் தமிழகத்தில் முகாமிட்டிருந்த கொல்கத்தா போலீஸ், கர்ணன் கோவையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தலைமறைவாகி இருப்பதாக வந்த செய்தி அறிந்த அவர்கள் இன்று காலை விமானம் மூலம் கோவை விரைந்தனர். 

கோவை விமான நிலையம் வந்த அவர்கள் கோவை மிலுமிச்சம்பட்டியில் உள்ள ரெசார்ட்டுக்கு சென்று முன்னாள் நீதிபதி கர்ணனை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!