இதற்கும் கீழே எப்படிதான் இறங்கி வர்றது...! இதுவும் மக்களுக்காகதான்..! நீதிபதிகளிடம் கோரிக்கைளை அடுக்கிய தொழிற்சங்கங்கள்...! 

 
Published : Jan 11, 2018, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
இதற்கும் கீழே எப்படிதான் இறங்கி வர்றது...! இதுவும் மக்களுக்காகதான்..! நீதிபதிகளிடம் கோரிக்கைளை அடுக்கிய தொழிற்சங்கங்கள்...! 

சுருக்கம்

Retired Judge should be a judge and talk

ஓய்வு பெற்ற நீதிபதி நடுவராக இருந்து பேச்சு நடத்த வேண்டும் எனவும் அவர் கூறுவதற்கு ஏற்ப இருதரப்பும் ஒத்துழைப்போம் எனவும் தொழிற்சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 8 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளி - கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். 

இதனால், நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆக்கப்பூர்வமான பதில் தருமாறு தொழிற்சங்க வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், ஓய்வு பெற்ற நீதிபதி நடுவராக இருந்து பேச்சு நடத்த வேண்டும் எனவும் அவர் கூறுவதற்கு ஏற்ப இருதரப்பும் ஒத்துழைப்போம் எனவும் தொழிற்சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2.44 % ஐ இடைக்காலமாக ஏற்க தயார் எனவும் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எங்கள் கோரிக்கைகளை ஏற்றால் உடனே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் எனவும் நடுவர் நீதிபதி தலைமையிலான பேச்சுவார்த்தை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைவிட எப்படி கீழே இறங்கி வருவது எனவும் இதுவும் ,மக்களுக்காக தான் எனவும் சிஐடியு வின் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!