தலைமை தகவல் ஆணையராக ஷீலா ப்ரியா பதவியேற்பு

 
Published : Dec 08, 2017, 07:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
தலைமை தகவல் ஆணையராக ஷீலா ப்ரியா பதவியேற்பு

சுருக்கம்

Retired IAS officer M Sheela Priya Tamil Nadu State Chief Information Commissioner taken oath today

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாப்ரியா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஷீலா ப்ரியாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தகவல் ஆணையர்களாக செல்வராஜ், தமிழ்குமார், பிரதீப் குமார், முத்துராஜ் ஆகியோருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தமிழக தகவல் ஆணையர்கள் பதவி ஏற்பு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற அவைத்தலைவர் தனபால், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!