TN 10th Results :இன்று 10 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி..? முழு தகவல்!

Published : Jun 19, 2022, 01:07 PM ISTUpdated : Jun 20, 2022, 08:56 AM IST
TN 10th Results :இன்று 10 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி..? முழு தகவல்!

சுருக்கம்

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொத்தேர்வு முடிகள் இன்று வெளியிடப்படவுள்ளது.  

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021- 22 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இதனையடுத்து 10 ஆம் வகுப்புக்கு ஜூன் 17 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 23 ஆம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

மேலும் படிக்க: Alert : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. ஆட்சியர்களுக்கு அலெர்ட் கொடுத்த சுகாதாரத்துறை செயலாளர்

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி 10 , 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை புது அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஜூன் 20 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. காலை 9.30 மணியளவில் 12 ஆம் வகுப்பிற்கும் முற்பகல் 12 மணியளவில் 10 ஆம் வகுப்பிற்கு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 20 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

மேலும் படிக்க: சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. தனியார் மருத்துவமனைக்கு திடீர் உத்தரவு போட்ட மாநகராட்சி..

PREV
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்