
புதுக்கோட்டையில் உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவறையில் 16 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கழிப்பறை உள்ளது. இன்று காலை துப்புரவு பணியாளர் ஒருவர் துப்புரவு பணியை மேற்கொண்டர்.
அப்போது, கழிப்பறையின் உள்ளே ஒரு பை ஒன்று இருப்பதைக் கண்டார். பையில் எந்தமாதிரியான பொருள் உள்ளதோ என்று அச்சப்பட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கழிவறையில் இருந்த பயையை சோதனை செய்தனர். அதில் 16 ஐம்பொன் சிலைகள் மற்றும் ஒரு காமாட்சி விளக்கு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
விநாயகர், நரசிம்மர், அம்மன் சிலைகள் என 16 ஐம்பொன் சிலைகள் இருந்தன. மேலும், காமாட்சி அம்மன் விளக்கும் அதில் இருந்தது.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்த பையை கேரளாவைச் சேர்ந்தவர்கள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
சிலை கடத்தல் கும்பல், போலீசாருக்கு பயந்து, ஐம்பொன் சிலைகளை கழிவறையில் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.