45 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் பறிமுதல்…சிக்கிய பாஜக தண்டபாணியிடம் ரிசர்வ் வங்கி இன்று விசாரணை…

 
Published : May 19, 2017, 08:11 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
45 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் பறிமுதல்…சிக்கிய பாஜக தண்டபாணியிடம் ரிசர்வ் வங்கி இன்று விசாரணை…

சுருக்கம்

Reserve bank officers wil enquire Dandapani about the 45 crores

45 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் பறிமுதல்…சிக்கிய பாஜக தண்டபாணியிடம் ரிசர்வ் வங்கி இன்று விசாரணை…

சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனியில் ராமலிங்கா ஸ்டோர்ஸ் என்ற போலீசாருக்கான சீருடைகள் விற்பனை செய்யும் கடையில் இருந்து  சாக்குமூட்டை மற்றும் அட்டைப் பெட்டிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதில் 45 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தததையடுத்து கடை உரிமையாளரான பாஜக வைச்  சேர்ந்த தண்டபாணி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் தண்டபாணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 45 கோடி ரூபாய் அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கிக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனிடையே  ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தண்டபாணியிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
இந்தி எதிர்ப்பு போராட்டம்... இதுவரை வெளிவராத ஆவணங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!