
வங்கியில் நகைஅடகு வைப்பதில் சிக்கல்
நாடு முழுவதும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும், விவசாயிகளும் வங்கிகளில் தங்களின் தேவைகளுக்காக நகையை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு சமீபத்தில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகைக்கடன் பெறுவதற்கு புதிதாக 9 விதிகளை அறிவித்திருந்தது. அதாவது அடமானம் வைக்கப்படும் நகை மதிப்பில் 75 விழுக்காடு மட்டுமே கடன் வழங்கப்படும். குறிப்பாக
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள் ஆண்டுதோறும் வட்டியை மட்டுமே செலுத்தி மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி, அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்க தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் பாதிக்கும், ஆனால் இது கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது. விலைமதிப்பில் 75 % கொடுக்கலாம் என்று சொல்கின்றார்கள். அதை தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்களை இது வெகுவாக பாதிக்கும். இதை அறிந்த நம் முதலமைச்சர் அவர்கள் நடுத்தர மக்களையும் விவசாயிகளையும் பாதிக்கின்றது என அறிந்து நிதி அமைச்சர் அவர்களுக்கு இதை திரும்ப பெற வேண்டும் என கடிதம் எழுதியிருக்கிறார்கள் வழியுறுத்தியிருக்கிறார்கள்.
முதல்வர் மருந்தக திட்டம்
இன்றைய ஆய்வுகளில் பிரதான கருத்தாக முதல்வர் மருந்தக திட்டம் பற்றி ஆய்வுக்கூட்டத்தில் ஆராய்ந்து அறியப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து படிப்படியாக எல்லா இடத்திலும் வர்த்தகம் என்பது வந்து செல்லக்கூடிய மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நல்ல வரவேற்பு உள்ளது என்பதற்கான அடையாளம் தான் இந்த வளர்ச்சி. வியாபாரம் கூடியுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.