தமிழகத்தில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு... அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்!!

Published : Feb 20, 2022, 04:20 PM IST
தமிழகத்தில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு... அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்!!

சுருக்கம்

சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய தினம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் ஆங்காங்கே சிறுசிறு பூசல்கள் ஏற்பட்டாலும் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் பிரச்சினை ஏற்பட்ட இடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டது. அதன் அடிப்படையில் சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059, வண்ணாரப்பேட்டை 179 ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174, மதுரை திருமங்கலம் நகராட்சி 17 ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள் 16M, 16W, திருவண்ணாமலை நகராட்சி 25 ஆம் வார்டு வாக்குச்சாவடிகள்  57M, 57W ஆகிய 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி வார்டு எண் 51, வாக்குச்சாவடி எண் 1174 உள்ளிட்ட 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?