புற்றுக்கோவிலில் கார்த்திகை சோமவார பூசை…

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
புற்றுக்கோவிலில் கார்த்திகை சோமவார பூசை…

சுருக்கம்

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கார்த்திகை முதல் வார சிறப்பு பூசை நடைபெற்றது.

பூசையின் ஐதீகம்:

தட்சன் வெகுண்டு போய் சந்திரனை தேய்ந்து போகும்படி சாபமிட்டார். தன்னுடைய ஒளி தேய்ந்து போவதை கண்டு வேதனையடைந்த சந்திரன் சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி, பாதி நாள் வளர்ந்தும் பாதி நாள் தேய்ந்தும் இருக்கும் படி சாபத்தை மாற்றியமைத்தார். சிவபெருமானை போற்றும் வகையில் இந்த பூசை நடத்தப்படுவது வழக்கம்.

காலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூசையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை ருத்திர ஜெபம், வருணஜெபம், யாகசாலை பூஜை தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சங்கரலிங்கசாமிக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகமும் 108 சங்காபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை சுப்பிரமணி அய்யர் மற்றும் கணேசபட்டர் செய்தார்கள்.

இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, செயலாளர் சுப்பையா, தலைமை ஆசிரியை கல்பனஸ்ரீனிவாசன், மகேந்திரா, தொழிலாதிபர் அமுதா ஜெய்சங்கர், கோமதி பாலமுருகன், பிரேமா முருகன் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா முடிந்ததும், பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தேவகி ரவிநாராயணன், அமுதா கோமதி பிரேமா ஆகியோர் பூசைக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் விஜய் பிரசார கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு.. பரபரப்பு! என்ன நடந்தது?
உங்க லைஃப் டோட்டலாக மாறப்போகுது.. தமிழக அரசு கொடுக்கும் பயிற்சி.. கை நிறைய சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்!