காட்டுப் பகுதியில் பெண் வெட்டிக் கொலை..

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
காட்டுப் பகுதியில் பெண் வெட்டிக் கொலை..

சுருக்கம்

கோவில்பட்டி அருகே காட்டுப் பகுதியில் பெண் வெட்டி படுகொலைச் செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் வெம்பூரில் காட்டு பகுதியில் பெண் ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

அந்த வழியே சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது வெட்டப்பட்டவர் ஒரு பெண் என்று தெரியவந்தது. உடனே, அவர்கள் மாசார்பட்டி காவல் நிலையத்திர்கு புகார் அளித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தைச் சுற்றி பார்த்து ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று ஆராய்ந்தனர்.

பின்னர், வெட்டப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரத்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண்ணின் பெயர் சுதா (28) என்பது தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்த விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் தமிழக விசிட்...! அதிமுக-பாஜகவுக்கு திமுக தரப்போகும் ட்விஸ்ட்..!
குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி