திருப்பூரில் தடையை மீறி ரேக்ளா ரேஸ் - பொதுமக்கள் ஆரவாரம்

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
திருப்பூரில் தடையை மீறி ரேக்ளா ரேஸ் - பொதுமக்கள் ஆரவாரம்

சுருக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையின் மீது அவசர சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் மாநில அரசும், மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து வலியுறுத்தவில்லை.

இதையொட்டி, மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து இன்று பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிகையாக பலரை கைது செய்துள்ளனர். ஆனாலும், மாநிலம் முழுவதும் உள்ள வாலிபர்கள், ஜல்லிக்கட்டு நடைபெறும் முக்கிய இடங்களுக்கு சென்று குவிந்துள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் செஞ்சேரி மலைப்பகுதியில் ரேக்ளா ரேஸ் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இதை காண, திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டுள்ளனர். ரேக்ளா ரேசில் கலந்து கொண்டுள்ள வீரர்களுக்கு, பொதுமக்கள் கைதட்டி, விசில் அடித்து உற்சாகப்படுத்துகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மக்களுடன் முதல்வர்.! நடந்து சென்று வாக்கு வேட்டை! ஓடிச்சென்று வாழ்த்து கூறிய சென்னைவாசிகள்
பிரசார வாகனத்தில் ஏறிய புதுமண தம்பதி.! காலில் விழுந்து ஆசிர்வாதம்