
உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்கமுடியாது என கூறியது. இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டு திரைப்பட இயக்குநர் கௌதமன் காயமடைந்தார்.
இதே போன்று மதுரை பாலமேடு,ஆலங்குளம், முடக்கத்தான், அரிட்டாபட்டி என பல்வேறு இடங்களில் நேற்று உற்சாகமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
அலங்காநல்லூாில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என கேள்வி எழுந்தது. ஜல்லிக்கட்டு நடைபெறமால் தடுக்க, ஆயிரக்கணக்கான போலீசார் அலங்காநல்லூாில் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், வாடிவாசல் அருகே சாமி கும்பிடுவதற்காக ஊா் பெரியவா்கள், 3 காளைகளை கொண்டு வந்தனா். பூஜை முடிந்தவுடன் திடீரென அந்த காளைகளை அவிழ்த்து விட்டனா்.
இதனையடுத்து, அங்கு குழுமியிருந்த மாடுபுடி வீரா்கள், காளைகளை உற்சாகத்துடன் அடக்கத் தொடங்கினா். தொடா்ந்து அங்கு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஜல்லிக்கட்டு நடத்தி வருவதால், அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினா், அவா்களை தடுக்க முடியாமல், திகைத்து நின்றனா்.
காளைகள் தொடா்ந்து அவிழ்த்துவிடப்பட்டு வருவதால், வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதைப்போலவே அலங்காநல்லூா் காட்சியளிக்கிறது.
காவல்துறையினரும் கைகளை பிசைந்துகொண்டு செய்வதறியமால் திகைத்து வருகின்றனா். தொடா்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதால், ஜல்லிக்கட்டு ஆர்வலா்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.