சுத்தத்தை கடைபிடிக்கவில்லை என்றால் குடிநீர் கட்டாம்... - அபராதத்துடன் கூடிய அதிரடி நடவடிக்கையில் மாநகராட்சி  நிர்வாகம்...!

First Published Oct 22, 2017, 12:49 PM IST
Highlights
Regional Collector Rohini ordered the drinking of drinking water in 18 places where the dengue was not spreading.


சேலத்தில் சுத்தத்தை கடைபிடிக்காமல் டெங்குவை பரப்பும் வகையில் இருந்த 18 இடங்களில் குடிநீர் இணைப்பை துண்டித்து மாவட்ட ஆட்சியர் ரோகினி நடவடிக்கை எடுத்துள்ளார். 

டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, தமிழக அரசு முழு முனைப்புடன், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளளில் குவிந்து வருகின்றனர். 

டெங்கு காய்ச்சலால் உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை துண்டிக்க சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் அதிகாரிகள், வீடு தோறும் அதிரடி ஆய்வை துவக்கி உள்ளனர்.  வீடுகள், கடை கள், காலி மனைகள், கட்டுமான பணியிடங்கள், சேமிப்பு கிடங்குகள், திரையரங்குகள், சுங்கச்சாவடிகளில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில், நேற்று மாவட்ட ஆட்சியர் ரோகினி வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில், டெங்குவை பரப்பும் வகையில் சுகாதாரமற்று இருந்த  18 இடங்களில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், 56 ஆயிரம்ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

click me!