காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு... இளைஞர் வெறி!

Published : Nov 11, 2018, 11:49 AM ISTUpdated : Nov 11, 2018, 11:52 AM IST
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு... இளைஞர் வெறி!

சுருக்கம்

நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மற்றும் அவரது தம்பியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மற்றும் அவரது தம்பியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியா (வயது20). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, வங்கி தேர்வுக்காக நெல்லையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவரது தந்தை குமார் இறந்து விட்டதால் தாய் மாலதியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். 

அதே பகுதியில் கூலி வேலை செய்து வரும் இசைக்கிமுத்து என்பவர் மாணவி பிரியாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது காதலை பிரியா ஏற்க மறுத்துவிட்டார். கடந்த ஜனவரி மாதம் இசக்கிமுத்து காதலிக்க மறுத்த பிரியாவை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பாக ஏர்வாடி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து இசைக்கிமுத்து தலைமறைவானார். பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவிற்காக இசக்கிமுத்து ஊருக்கு வந்துள்ளார். ஆனால் அவர் பிறகு சென்னைக்கு செல்லவில்லை. இந்நிலையில் தான் பிரியாவை மீண்டும் தன்னை காதலிக்குமாறு இசக்கிமுத்து வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து இசக்கி முத்துவின் காதலை பிரியா ஏற்க மறுத்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த இசைக்கிமுத்து தனக்கு கிடைக்காத தனக்கு கிடைக்காத பிரியா, வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என தீர்மானித்தார். 

அப்போது இசக்கிமுத்து யாரும் இல்லாத நிலையில் அரிவாளுடன் பிரியாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த பிரியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தடுக்க சென்ற தம்பிக்கும் வெட்டு விழுந்தது. பிரியா, இசக்கி ஆகிய இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன் அலறினார்கள். காயமடைந்த அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனே இசக்கிமுத்து அங்கிருந்து தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே காதல் விவகாரம் தொடர்பாக பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலை அதிகாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா.! இதுக்குலாமா கொலை செய்வாங்க! வியாபாரியை காரில் கடத்தி குற்றாலத்தில் கதறவிட்டு கதையை முடித்த பயங்கரம்
திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!