நெல்லை அருகே ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர் நயினார் 25. இவரது மனைவி இலக்கியா 22. இவர்களது மகள் ரஞ்சனா 2. இலக்கியா, மகளுடன் பெற்றோர் ஊரான உடன்குடி சென்றிருந்தார். நவம்பர் 5-ம் தேதி அங்கிருந்து கிளம்பியவர் வீடு வந்து சேரவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தான்குளத்துக்கு நேற்று மதியம் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஒரு ஆணும், பெண்ணும் குழந்தையுடன் இருந்தனர். திடீரென்று அந்த ஜோடி மயங்கினர். அதை முதலில் பயணிகள் கவனிக்கவில்லை. பிறகு குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டும் கூட அவர்கள் உரங்கிய நிலையில் இருந்தனர்.
குழந்தை அழுததும் பயணிகள் சென்று பார்த்த போது தான் ஆணும, பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனே ஓட்டுநர் மருத்துமனைக்கு பேருந்தை திரும்பினார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவருமே ஏற்கனவே இருந்து விட்டதாக கூறினார். பிறகு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்த 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரிவந்துள்ளது.
அவர்களிடம் இருந்த ஆதார் அட்டையை வைத்து விசாரித்ததில், இறந்தது, தேடப்பட்டுவந்த இலக்கியாவும், அவரது, கணவரின் அண்ணன் மணிகண்டன் 27 என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு இடையே தவறான பழக்கம் இருந்துள்ளதும், போலீசிற்கு புகார் சென்றதால் தற்கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கின்றன.