பழைய ரெக்கார்டை முறியடித்த வசூல்! டாஸ்மாக் வரலாற்றில் சாதனை நிகழ்த்திய பொங்கல் கலெக்‌ஷன்...

Published : Jan 17, 2019, 01:53 PM IST
பழைய ரெக்கார்டை முறியடித்த வசூல்! டாஸ்மாக் வரலாற்றில் சாதனை நிகழ்த்திய பொங்கல் கலெக்‌ஷன்...

சுருக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை முந்தைய ரெக்கார்டுகளை முறியடித்துள்ளது. 

தமிழகத்தில் பொங்கலையொட்டி 303 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, டாஸ்மாக்கில் விற்பனை எகிறும். எனவே, ஒவ்வொரு வருடமும் அரசு இலக்கு வைத்து மது விற்பனையை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில் இந்த பொங்கலுக்கு 303 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போகி பண்டிகையின் போது ரூ.148 கோடிக்கும், பொங்கலன்று ரூ.155 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு இவ்விரு நாட்களில் 220 கோடிக்கு மது விற்பனை ஆகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இறந்து நாட்களில் டாஸ்மாக் வரலாற்றில் முந்தைய சாதனையை முறியடித்த வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.83 கோடி ரூபாயை சேர்த்து அள்ளியுள்ளது டாஸ்மாக்.

தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றின்மூலம் நாளொன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைத்துவருகிறது. பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட 25 சதவீதம் மது விற்பனை அதிகமாக இருக்கும். எனவே, பண்டிகையின்போது டாஸ்மாக் நிர்வாகம், இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது வழக்கம், இதனால் கடந்த இரண்டு நாட்களில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது டாஸ்மாக்.

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை