தமிழகம் வந்தடைந்தது மலேசிய மணல்..! வரலாற்றில் முதல் முறையாக..!

 
Published : Oct 23, 2017, 03:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
தமிழகம் வந்தடைந்தது மலேசிய மணல்..! வரலாற்றில் முதல் முறையாக..!

சுருக்கம்

received mud from malasia

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது மலேசிய ஆற்று மணல்.

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மணல் தட்டுப்பாடு காரணமாக முதல் முறையாக 55 ஆயிரத்து 445 டன் ஆற்று மணலை கப்பல் மூலமாக மலேசியாவிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.

மணல் தட்டுபாடு தமிழகத்தில் அதிகமாக  உள்ளதால், கட்டுமான பணிகள் பல இடங்களில் முடங்கி உள்ளது.மேலும் அவ்வாறே மணல்  கிடைத்தாலும்அதன் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளதால்,மக்கள் மணல் இல்லாமல் அவரவர் சொந்த வீடுகளில் கூட சிறு சிறு திருத்தம்  செய்வதிலும் தாமதித்து வருகின்றனர்

“அன்னா டோரோதியா” கப்பல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தான் இந்த ஆற்றுமணலை இறக்குமதி செய்து உள்ளது. “அன்னா டோரோதியா”என்ற கப்பல்,கடந்த சனிக்கிழமையன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த மணல் அங்கிருந்து,தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு  மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இதற்கு முன்னதாக தமிழகத்தில் இருந்து பல நாடுகளுக்கு மணல்  ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த காலம் போய், தற்போது வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு மணல் இறக்குமதி செய்யும் நிலைமை ஏற்பட்டு உள்ளது .

தமிழகத்திற்கு மணல் இறக்குமதி செய்வது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது    

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு