
வடகிழக்கு பருவ மழை வரும் 26 ஆம் தேதிக்கு மேல்தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாகவே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மழை அதிகமாகவே பெய்தது.
இந்நிலையில்,வட கிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால், மழை சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதே போன்று வட கிழக்கு பருவ மழையும் அதிகமாக பெய்தால் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.விளைச்சலும் அதிகமாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,ஒரு சில இடத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது