
மதுரையில் முன்னாள் கவுன்சிலர் கணேசன் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மதுரை மேல அனுப்பானடி வடிவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜி. கணேசன் . இவர் அனுப்பானடி பகுதியில் 2001-2006, 2006-2011-ல் இருமுறை கவுன்சிலராக இருந்தவர். அவரது வார்டு பெண்கள் வார்டாக மாறியதால் கடந்த முறை, அவரது மனைவி காதரம்மாள் கவுன்சிலராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தனது பேரனுடன், மதுரை சிமெண்ட் ரோட்டில் இறைச்சி வாங்கிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
அப்போது, கேட் லாக் சாலையில் சென்று கொண்டிருந்த போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென கணேசனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
இதையடுத்து சிகிச்சைகாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பிரேம், முத்துமுருகன், திருமுருகன், அருண்குமார் ஆகியோர் சரணடைந்தனர்.