பூட்டிக் கிடந்த வீட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம சாவு; பல்வேறு கோணங்களில் போலீஸ் தீவிர விசாரணை...

 
Published : May 15, 2018, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
பூட்டிக் கிடந்த வீட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம சாவு; பல்வேறு கோணங்களில் போலீஸ் தீவிர விசாரணை...

சுருக்கம்

Real estate business man mysterious death Police investigate at various angles ...

சிவகங்கை 

சிவகங்கை பூட்டிக் கிடந்த வீட்டில் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் ரியல் எஸ்டேட் அதிபர் இறந்து கிடந்தார்.

சிவகங்கை மாவட்டம், ஆக்ஸ்வார்டு நகரைச் சேர்ந்தவர் ராஜா (52). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் வெகு நேரமாகியும் இவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே, அக்கம்பக்கத்தினர் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

அந்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை நகர் காவலாளர்கள் வீட்டை உடைத்து திறந்த பார்த்தபோது, உடலில் வெட்டுக் காயங்களுடன் ராஜா இறந்து கிடப்பது தெரியவந்தது. 

உடனே, அவரது உடலைக் கைப்பற்றிய காவலாளர்கள், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், அந்த வீட்டில் ஆய்வு நடத்தினர். 

வீட்டில் நகை, பணத்தை திருட முயன்றபோது கொலை நடந்ததா? அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில், காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இன்டர்வியூக்கு வந்தாலே கை மேலே வேலை! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
இந்துகளுக்கு தீபம் ஏற்ற உரிமை இல்லையா..? தன்னையே மாய்த்து கொண்ட மதுரை இளைஞரின் விபரீத முடிவு..