பொதுத் தேர்வில் கலக்க தயாராக மாணவ, மாணவிகள்; நெல்லையில் மொத்தம் 46 ஆயிரத்து 199 பேர் எழுத ரெடி…

First Published Mar 8, 2017, 8:45 AM IST
Highlights
Ready to mix with the general exam the students Ready to write a total of 46 thousand 199 people


நெல்லை

நெல்லை மாவட்டத்தில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 46 ஆயிரத்து 199 மாணவ, மாணவிகள் எழுத தயாராக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுத் தொடங்குகிறது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி என மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன.

நெல்லை கல்வி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 270 மாணவ, மாணவிகளும், சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 836 மாணவ, மாணவிகளும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகள் எழுத தயாராக இருக்கின்றனர்.

ஆக மொத்தம் நெல்லை மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 639 மாணவர்களும், 23 ஆயிரத்து 560 மாணவிகளும் என மொத்தம் 46 ஆயிரத்து 199 பேர் எழுதுகின்றனர்.

நெல்லை கல்வி மாவட்டத்தில் 48 மையங்களும், சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 55 மையங்களும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 47 மையங்களும் என மொத்தம் 150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வை கண்காணிக்க வழக்கம் போல பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

 

click me!