காலாவதியான ஒப்பாரி தலைவர்கள் ஓபிஎஸ், டிடிவி பேச்சை காது கொடுத்து கேட்க நேரமில்ல.! அசால்டு செய்யும் ஆர்.பி.உதயகுமார்

Published : Sep 18, 2025, 12:45 PM IST
Rb Udayakumar

சுருக்கம்

Rb Udayakumar : காலாவதியான தலைவர்களின் கருத்துக்களைப் புறக்கணித்து, எடப்பாடியாரின் வெற்றிப் பயணத்திற்கு துணை நிற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

RB Udhayakumar on Stalin's rule : சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அதிமுக கழக அம்மா பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரத்தை தொடங்கப்படவுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்

இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் விரோத மன்னராட்சியை நடத்திக் கொண்டிருக்கும்,இந்த சர்வாதிகாரியான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழகத்தை முதுகெலும்பை உடைத்து விட்டு, முப்பெரும் விழாவில் தமிழகத்தை தலை குனிய விட மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுள்ளார். குறிப்பாக எடப்பாடியாரின் மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக வன்மாக முப்பெரும் விழாவில் வாய்க்கு வந்ததை பேசி உள்ளார்.

தமிழகத்தில் மன்னராட்சி- ஆர்.பி.உதயகுமார்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டு உள்ளது இதில் ஆளுங்கட்சிக்கு கள நிலவரத்தை, நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பை, குறைகளை எடுத்துச் சொல்வது தான் எதிர்க்கட்சியின் பிரதான கடமையாகும். ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபொழுது இது தெரியவில்லையா என்பதுதான் கவலையாக உள்ளது. ஆகவே 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் வெற்றி சரித்திரம் படைத்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் விமர்சனம் செய்து வருகிறார். டெல்லி சென்றால் விமர்சனம் , தமிழ்நாடு வந்தார் விமர்சனம், சட்டமன்றம், மக்கள் மன்றம் என்று அனைத்து இடத்திலும் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் .தூங்கினாலும்,நடந்தாலும் எடப்பாடியார் பற்றி சிந்தனை தான் ஸ்டாலினுக்கு உள்ளது.மாநாடு என்றாலும், முப்பெரும் விழாவாக இருந்தாலும் அதிலும் கூட எடப்பாடியார் மீது சிந்தனையாகத்தான் ஸ்டாலின் உள்ளார்.

இன்றைக்கு தனது சேவையால் மக்கள் மனதில் எடப்பாடியார் நிரந்தரமாக குடிகொண்டுள்ளார் என்பது எல்லோர் நன்கு அறிவார்கள், மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் தான், 2026 சட்டமன்ற தேர்தலில் முத்திரை பதிக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றியை மக்கள் தீர்ப்பு வழங்க தயாராக இருக்கிறார்கள். அங்கே தொட்டு, இங்கே தொட்டு என சில காலாவதி தலைவர்கள் ஒப்பாரி ஆங்காங்கே எழுப்பி வருகிறார்கள். ஆகவே காலவதியான தலைவர்களால் எடப்பாடியார் லட்சியப் பயணத்தை திசை திருப்ப முடியாது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறோம்.

ஒப்பாரி தலைவர்கள்- ஆர்பி உதயகுமார்

தமிழகத்தில் நடைபெறும் மன்னராட்சிக்கு முடிவு கட்டி, எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சிக்கு நடைபெற உள்ள வெற்றிக்கு அடித்தளம் அமைந்துவிட்டது ஆகவே கழகத் தொண்டர்கள் உண்,உறக்கம் பாராது அயராது உழைக்க வேண்டும். இன்றைக்கு காலாவதியான ஒப்பாரி தலைவர்கள் கருத்துக்களை காது கொடுக்க கேட்க நமக்கு நேரமில்லை, ஏனென்றால் நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம், இன்றைக்கு எடப்பாடியாருக்கு நாம் அனைவரும் கரம் கொடுத்து துணை நிற்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!