பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களில், சில தீர்மானங்கள் கல்வியை சமயச் சார்புடையதாக்கும் முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு
பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பக்தி தொடர்பாக நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இறுதியாக 21 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில்,
பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள், 5 ஆவது தீர்மானமாக : “ முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து
எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு என்னை பற்றி பேச எந்த அதிகாரமும் இல்லை.! இறங்கி அடிக்கும் அண்ணாமலை
கல்வியில் ஆன்மீகம்
8 ஆவது தீர்மானமாக : “ விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் ; 12 ஆவது தீர்மானமாக : “ முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானது
கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல. இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
TOMATO : மீண்டும் குறைந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவுதானா.? கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?