வருகிற 26–ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் ரேசன் வியாபாரிகள்...

Asianet News Tamil  
Published : Feb 22, 2018, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
வருகிற 26–ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் ரேசன் வியாபாரிகள்...

சுருக்கம்

Ration traders involved in hunger strike on the 26th ...

திண்டுக்கல்

ரேசன் வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட கூட்டத்தில் வருகிற 26–ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடுபுழாவில் நேற்று ரே‌சன் வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் முகமதுஅலி சிறப்புரை ஆற்றினார்.  இதில் நிர்வாகிகள் கோபகுமார், ரெஜி, ஜோஷிஜோசப் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், "வழங்கல்துறை சார்பாக ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் அளவில் குறைபாடு இருந்தால் வாங்கக்கூடாது" உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26–ஆம் தேதி எர்ணாகுளத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஒரு வாக்குச்சாவடியில் 1200 வாக்காளர்கள் மட்டுமே.. மொபைல் போன்கள் அனுமதி இல்லை
வெயிலுக்கு குட்பை.. ஒரு வாரம் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட் இதோ!