Pongal: ஜனவரி 16ஆம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்படுமா?

Published : Jan 14, 2023, 12:30 PM IST
Pongal: ஜனவரி 16ஆம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்படுமா?

சுருக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாளை பொதுமக்கள் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் ரூ.1000 பணத்துடன் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவை பொங்கல் பரிசாகக் கொடுக்கப்படுகின்றன.

வழக்கமாக மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. ஆனால், இந்த மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்களுக்கு விநியோகிப்பதற்காக ரேஷன் கடைகள் இரண்டாவது வெள்ளியிலும் இயங்கின.

எனவே, வரும் 16ஆம் தேதி, திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர், ஜனவரி 27-ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இப்போது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறது.

எனவே, வரும் 16ஆம் தேதி திங்கட்கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படாது. 27ஆம் தேதி வழக்கம்போல செயல்படும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!