சற்றுமுன் தகவல்.. வெள்ளிக்கிழமை ரேஷன் கடை இயங்குமா.?ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published May 12, 2022, 12:09 PM IST
Highlights

அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அமைச்சரின்‌ பேச்சில்‌ நம்பிக்கையில்லாததால்‌ திட்டமிட்டபடி போராட்டம்‌ நடைபெறும்‌ என்று தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள்‌ சங்கம் அறிவித்துள்ளது.
 

கூட்டுறவுத்துறையின்‌ கீழ்‌ உள்ள நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில்‌ வரும்‌ வெள்ளிக்கிழமை மாநிலம்‌ தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நியாயவிலைக்கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் அகவிலைப்படி உயர்வு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி, சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.  

கொரோனா காலத்தில் கூட பொதுமக்கள் நலனுக்காக அயராது பணியாற்றிய தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில்‌, நியாய விலைக்‌ கடை ஊழியர்கள்‌ போராட்டம் நடத்தியுள்ளனர். இதனிடையே நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல நியாய விலைக்‌ கடை ஊழியர்களுக்கும்‌ அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும்‌ என கூட்டுறவுத்‌ துறை அமைச்சர்‌ ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.

மேலும் படிக்க: மேலும் ஒரு மோசடி புகார்.. மீண்டும் கைதாகிறாரா முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி?

இந்நிலையில் இதுக்குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர், அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல நியாய விலைக்‌ கடை ஊழியர்களுக்கு கண்டிப்பாக உயர்த்தலாம்‌ என்று அமைச்சர் தெரிவித்தும், இதுவரை இதற்கான அறிவிப்பை அரசு வரவில்லை. இதனால் சென்னை கீழ்பாக்கத்தில்‌ உள்ள கூட்டுறவு சங்கங்களின்‌ பதிவாளர்‌ அலுவலகம்‌ முன்பு வெள்ளிக்கிழமை கவனார்ப்பு ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள்‌ சங்கம்‌ அறிவித்துள்ளது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த மாதம் அறிவித்தார். இதுவரை எந்த நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை. இதனால்‌ அமைச்சரின் பேச்சின் எங்க்ள் நம்பிக்கை இல்லை. எனவே திட்டமிட்டபடி நியாயவிலைக்கடை பணியாளர்கள் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். சென்னையில்‌ கூட்டுறவுத்துறை பதிவாளர்‌ அலுவலகம்‌ முன்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில், இருந்து பல்லாயிரக்கணக்கான நியாயவிலைக்கடை பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கூறினார்.

மேலும் படிக்க: Pattina Pravesam: சர்ச்சையை ஏற்படுத்திய தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்.. கொடியேற்றத்துடன் துவக்கம்..

click me!