பிறந்து 5 நாட்களேயான பச்சிளம் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற தாய்.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்.!

By vinoth kumar  |  First Published May 12, 2022, 9:53 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சத்தரை கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்பிராஜன். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் உள்ள நிலையில், சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருவள்ளூரில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் தெரியவந்ததையடுத்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சத்தரை கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்பிராஜன். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை என இரு குழந்தைகள் உள்ள நிலையில், சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கூலிவேலை செய்யும் கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் சந்திரா ஸ்ரீ பெருமந்தூர் பேரூராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையை சந்திரா, தனது வீட்டுக்கு தெரியாமல் அவருடன் பணியாற்றும் ஜெயந்தி என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக மப்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, ஒரு மணிநேரத்தில் போலீசார் ஜெயந்தியிடம் இருந்த குழந்தையை மீட்டனர். திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழுமத்தில் வைத்து சந்திராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றது தெரியவந்தது. போலீசார் சந்திரா மற்றும் ஜெயந்தியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

click me!