கிணற்றில் விழுந்த புள்ளிமானை மீட்ட வனத்துறை அதிகாரிகள்...பாராட்டும் நெட்டிசன்கள்

Published : May 12, 2022, 09:50 AM IST
 கிணற்றில் விழுந்த  புள்ளிமானை மீட்ட வனத்துறை அதிகாரிகள்...பாராட்டும் நெட்டிசன்கள்

சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் விழுந்த புள்ளிமானை வனத்துறையின் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சியை  சமூக வலை தளத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ  வெளியிட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.  

தண்ணீர் தேடி வந்த மான்

காடு செழிப்பாக இருந்தால் தான் மழை பெய்யும். காடு செழிக்க விலங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வன விலங்குகள் பெருகினால் மட்டுமே மழைக்கு சாத்தியம்.இது அறியாமல் விலங்குகளை வேட்டையாடுவது, கொன்று குவிப்பது வழக்கமாகி வருவது வேதனையளிக்கிறது.இது ஒரு பக்கம் என்றால் காடுகளை ஆக்கிரமித்து வீடுகள், ரெசார்ட்டுகள் போன்றவை அமைப்பதால் தங்கள் வழித்தடங்களை யானை, புலி, மான் உள்ளிட்ட இழந்து தவித்து வருகின்றனர். அப்படி காட்டில் இருந்து வெளியே வரும் விலங்குகள் பல்வேறு ஆபத்துகளை மனிதர்களால் சந்திக்கிறது. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மான் ஒன்று கிணற்றில் விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிணற்றில் விழுந்த மானை மீட்ட வனத்துறை

கோடை காலம் அதிகரித்து இருப்பதன் காரணமாக தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் ஒன்று திறந்தவெளி கிணற்றில் விழுந்து தவித்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் கிணற்றில் விழுந்து உயிருக்கு போடிக்கொண்டிருந்த மானை கயிற்றால் கட்டி பத்திரமாக மீட்டனர் இதனையடுத்து அடந்த வனப்பகுதிக்குள் மானை வனத்துறையினர் விடுவித்தனர். இது தொடர்பான காட்சியை வனத்துறை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வனத்துறை ஊழியர்களை பாராட்டி வருகின்றனர்.. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!
அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்