
அரியலூர்
அரியலூரில் இன்று ரேசன் குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது என்றும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து மக்கள் பயன் பெறலாம் என்றும் ஆட்சியர் க.லட்சுமிபிரியா தெரிவித்தார்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா நேற்று செய்திக்குற்ப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்தச் செய்திக்குறிப்பில், "அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் புதுப்பாளையம், உடையார்பாளையம் வட்டம் வடபாகம், செந்துறை வட்டம் ஆலத்தியூர், ஆண்டிமடம் வட்டம் ஐயூர் ஆகிய கிராமங்களில் இன்று (ஜனவரி 20) காலை 10 மணிக்கு ரேசன் குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது.
பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
எனவே, மக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.