TN Fishermen : நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம்… அறிவித்தது ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம்!!

By Narendran SFirst Published Dec 20, 2021, 3:05 PM IST
Highlights

இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிச.18 ஆம் தேதியன்று 600க்கும் மேற்பட்ட படகுகளில் 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு அருகே இவர்கள் இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், 6 விசைப் படகுகளை சிறைபிடித்து அதிலிருந்து 43 பேரை கைது செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் டிச.31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, சில மணி நேரங்களே ஆன நிலையில், மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு  தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, 55 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார். இதற்கிடையில்,சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

திடீர் வேலைநிறுத்தத்தால் 1 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர். தற்போது கைதான மீனவர்கள் காங்கேசன்துறை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு, டிச.31 ஆம் தேதிக்குள் விடுவிக்காத பட்சத்தில் ஜனவரி 1 ஆம் தேதி ராமேஸ்வரம் – சென்னை விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலை தங்கச்சி மடம் பகுதியில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

click me!