#Breaking:மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு

Published : Dec 19, 2021, 04:35 PM IST
#Breaking:மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு

சுருக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சி மடத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைபடகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததுடன் மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சி மடத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைபடகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததுடன் மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ளனர். இரண்டு விசைபடகில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 6 படகுகளை பறிமுதல் செய்து 43 மீனவர்களைக் கைது செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. 

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, 43 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள மீனவர்கள், இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  இந்திய மீனவர்கள் 43 பேரை எல்லை கடந்து வந்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது, ராமேஸ்வரம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் மீனவர்கள் மீட்கப்படும் வரை மீன்பிடித் தொழில் நிறுத்தத்தை மீனவர்கள் அறிவித்திருக்கிறார்கள். 

மீனவர்களின் இந்த அறிவிப்பால் ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் சீன இருப்பதாகத் தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது. மேலும் கைதான மீனவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சி மடத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைபடகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததுடன் மேலும் மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு